Is rishabh
ஐபிஎல் 2021: பரபராபான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் கடந்தார். பின்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 28 ரன்களிலும், ரிஷப் பந்த் 37 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டு அணிக்கு சிறப்பாக ஒரு ஸ்கோரை கொண்டு சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் சிங், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரஷித் கான் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து அசத்தியதோடு, அணியை வெற்றியை நோக்கியும் அழைத்து சென்றார்.
அதன்பின் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவை என்ற நிலையில் வில்லியம்சன் ஒரு பவுண்டரி, சுஜித் ஒரு சிக்சரை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்து போட்டியை டிரா செய்தது.
இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. இதையடுத்து சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் இணை களமிறங்கி 7 ரன்களை எடுத்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணிக்கு ரிஷப் பந்த், ஷிகர் தவான் களமிறங்கினர்.இதில் ரஷித் கான் வீசிய மூன்றாவது பந்தை ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on Is rishabh
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் தொடரில் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
மும்பை வான்கேடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி ...
-
ஐபிஎல் 2021: உனாட்கட், முஸ்தபிசூர் வேகத்தில் சரிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 7ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: அறிமுக கேப்டன்களுன் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றி பெறுவது யார்?
நடப்பு ஐபிஎல் சீசனின் ஏழாவது லீக் போட்டி இன்று மும்பை வான்கேடே மைதானத்த ...
-
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது. இதில் இன்ற ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1 ...
-
ஐபிஎல் திருவிழா 2021: கீப்பர்களுக்கு இடையேயான போட்டியில் வெல்ல போவது யார்? சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில ...
-
ஐபிஎல் திருவிழா 2021: கடந்தாண்டு தவறவிட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
கோப்பையை வெல்லும் முயற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்முறம் காட்டிவருகிறது ...
-
தேனியிடன் கற்றுக்கொண்டதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவேன் - ரிஷப் பந்த்
தோனியிடம் இருந்து தான் பெற்ற வித்தைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்த உள்ளேன். ...
-
பந்த் சிறந்த கேப்டனாக செயல்படுவார் - சுரேஷ் ரெய்னா!
நடப்பண்டிற்கான ஐபிஎல் திருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24