Ji maharaj
WI vs SA, 2nd Test: விண்டீஸை வீழ்த்தியதுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Related Cricket News on Ji maharaj
-
வெற்றிக்காக எங்களால் இயன்றவரை முயற்சித்தோம் - டெம்பா பவுமா!
இப்போட்டியில் போதுமான நேரம் இல்லை என்பதாலும், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்பதாலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்காவை சமாளித்து ஆட்டத்தை டிராவில் முடித்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs SA, 1st T20I: மஹாராஜ், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; 233 ரன்களில் ஆல் அவுட்டானது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களை மட்டுமே எடுத்த ஆல் அவுட்டானது. ...
-
WI vs SA, 1st Test: புதிய மைல் கல்லை எட்டிய கேசவ் மஹாராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 250 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் எனும் பெருமையை கேசவ் மஹாராஜ் பெற்றுள்ளார். ...
-
WI vs SA, 1st Test: கேசவ் மஹாராஜ் அசத்தல் பந்துவீச்சு; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
ரோஹித் சர்மா, சூர்யா, துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மஹாராஷ்டிரா அரசு தரப்பில் பாராட்டு விழா!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மும்பைச் சேர்ந்த ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ...
-
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அஸ்திவாரத்தை சரித்த கேஷவ் மஹாராஜ் - வைரல் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கேஷவ் மஹாராஜ் தனது முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என கடந்த மதமே கணித்த கேசவ் மஹாராஜின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வங்கதேசத்திற்கு எதிரான த்ரில் வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் சில சாதனைகளையும் படித்துள்ளது. ...
-
ஆட்டத்தின் வெற்றியை மாற்றிய கேட்ச் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: கடைசி ஓவரில் கலக்கிய மகாராஜ்; வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47