Advertisement
Advertisement
Advertisement

Litton

அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Image Source: Google
Advertisement

அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

By Bharathi Kannan June 13, 2024 • 21:15 PM View: 189

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள  இத்தொடரில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

செயின்ட் வின்செண்டில் உள்ள அர்னோஸ் வாலெ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பெட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

Related Cricket News on Litton