Nz vs ind
T20 WC 2024: ரோஹித் சர்மா அரைசதம்; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த நிலையில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் 5 ரன்களை எடுத்திருந்த மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரூ பால்பிர்னியும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த லோர்கன் டக்கர் - ஹாரி டெக்டர் இணை அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். ஆனால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்திருந்த லோர்கன் டக்கர் ஆட்டமிழக்க, 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹாரி டெக்டரும் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Nz vs ind
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
புவனேஷ்வரின் மெய்டன் சாதனையை முறியடித்த பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய வீரர் எனும் புவனேஷ்வர் குமாரின் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா முறியடித்துள்ளார். ...
-
T20 WC 2024: ஹர்திக், அர்ஷ்தீப் அபாரம்; அயர்லாந்தை 96 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஒரே ஓவரில் அயர்லாந்து தொடக்க வீரர்களை காலி செய்த அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர் நம்பிக்கை!
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்கள் அணியில் உள்ள ஏதேனும் இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நீங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என அயர்லாந்து அணி தலைமை பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன் தெரிவித்துள்ளார். ...
-
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஃபார்மை காட்டிய பாண்டியா - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது வைரலாகியுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: அர்ஷ்தீப், தூபே அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: பந்த், பாண்டியா சிக்ஸர் மழை; வங்கதேச அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24