Phil salt
ரஸல் பந்துவீச்சில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசிய சால்ட் - வைரல் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸ் 38 ரன்களிலும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸலும் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
Related Cricket News on Phil salt
-
டாஸை விட போட்டியை வெல்வதே முக்கியம் என நினைக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எங்கள் அணி வீரர்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறோம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நரைன், சக்ரவர்த்தி அசத்தல்; லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் மிரட்டிய நரைன்; லக்னோ அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; கேகேஆர் அணிக்கு பின்னடைவு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளா ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகளில் பங்கேற்க மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்; ஒற்றை கையில் பிடித்த ஆவேஷ் கான் - காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: பில் சால்ட், ஸ்ரேயாஸ் அதிரடியில் லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: ஸ்டொய்னிஸிற்கு அதிர்ச்சி கொடுத்த சால்ட் கேட்ச்; காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் வீரர் பில் சால்ட் பிடித்த கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது ஏன்? காணரத்தை கூறிய ஜேசன் ராய்!
கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் அதிரடி வீரர் ஜேசன் ராய், ஏன் இந்தாண்டு ஐபிஎல்தொடரிலிருந்து விலகினேன் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே - காணொலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; அதிரடி வீரரை தட்டித்தூக்கிய கேகேஆர்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் ஜேசன் ராய்க்கு பதிலாக அதிரடி வீரர் பிலிப் சால்ட்டை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47