Sa 20 league
ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான போட்டியானது கடுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள இருந்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதற்கேற்றாவரே மழையுன் நின்ற நிலையில் மைதானத்தில் தன்மை குறித்து நடுவர்களும் பரிசோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி மைதான ஊழியர்களும் தண்ணிரை வடிக்கட்டும் முயற்சியில் இறங்கி இருந்தனர்.
Related Cricket News on Sa 20 league
-
அணியினருடன் பயணிக்காத கேஎல் ராகுல்; நாளை போட்டியில் விளையாடுவாரா?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நாளை டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்கள்; சிக்கலை சந்திக்கும் அணிகள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பி வருவது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
இப்போது எல்லாவற்றையும் சரியாக செய்துவருகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
யாஷ் தயாள் மற்றும் லோக்கி ஃபெர்குசன் இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் வெற்றிக்கு உதவிவருகிறார்கள் என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
கேட்சுகளை விட்டதே தோல்விக்கு காரணம் - அக்ஸர் படேல்!
இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து கேட்சுகளை விட்டது தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2024: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தினேஷ் கார்த்திக் மோசமான சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பட்டிதார், ஜேக்ஸ் அதிரடி ஆட்டம்; டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இப்போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் அற்புதமான ஒன்று - ருதுராஜ் கெய்க்வாட்!
சொந்த மைதானத்தில் நடைபெறும் கடசி லீக் போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் அற்புதமானது என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட் முறையில் விக்கெட்டை இழந்த ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட் (Obstructing the Field) விதிப்படி விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எதிர்பார்த்த ஸ்கோரை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் மெதுவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அதற்கு பதிலாக விக்கெட் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறிவிட்டது என தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24