South africa cricket team
அணி பேருந்தை தவறவிட்டது கொஞ்சம் சங்கடமாக இருந்தது - ஜார்ஜ் லிண்டே!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதன்படி, நேற்று நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் டேவிட் மில்லர் 82 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 48 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on South africa cricket team
-
SA vs SL: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேன் பேட்டர்சன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தான் சேர்க்கப்பட்டது குறித்து விமர்சித்தவர்களுக்கு டேன் பேட்டர்சன் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்திற்கு முன்னேறியதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாச படுத்தியுள்ளது. ...
-
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி இன்று அறிவித்துள்ளார். ...
-
SA vs SL, 2nd Test: ரியான் ரிக்கெல்டன் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இலங்கை தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SA vs PAK: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக கிளாசென் நியமனம்!
பாகிஸ்தான் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகினார். ...
-
SA vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
இலங்கை டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த தென் ஆப்பிரிக்க அணி வேகப்பாந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய மார்கோ ஜான்சன் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன. ...
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சாடிய ஹென்ரிச் கிளாசென்!
குறைந்த போட்டிகளைக் கொண்ட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் சாடியுள்ளார். ...
-
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து லுங்கி இங்கிடி விலகல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எதிர்வரும் இலங்கை, பாகிஸ்தான் தொடர்களில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47