Suryakumar yadav
சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்!
இந்திய அணிக்கு சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பைக்கு முன்பாக, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை மற்றும் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்கள் இருந்தது. ஆசியக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி குறித்து எந்த பக்கமும் பெரிய நம்பிக்கையான பேச்சுகளைப் பார்க்க முடியவில்லை. இந்திய அணியை உலகக் கோப்பை அரையிறுதி அணியாக தேர்ந்தெடுப்பவர்கள் கூட, இந்திய அணியின் குறை என்று எதையாவது சுட்டிக் காட்டவே செய்தார்கள்.
இந்த நிலையில்தான் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான பேட்டிங் மூலம் வெளியே வந்தார்கள். மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் என ஒரு படையே வெளியே வந்தது. இதில் மிக முக்கியமாக பந்துவீச்சில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சிராஜ், குல்தீப் என நல்ல ரிதத்தில் இருப்பதை காட்டினார்கள்.
Related Cricket News on Suryakumar yadav
-
இதுதான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாத முதல் போட்டி - சூர்யகுமார் யாதவ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் மெதுவாக விளையாடி நீண்ட நேரம் களத்தில் நின்றால் ரன்களை குவிக்க முடியும் என்பதை தற்போது உணர்ந்துதான் சற்று நேரம் நின்று விளையாடினேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் நிச்சயமாக எக்ஸ் ஃபேக்டர் - விரேந்திர சேவாக்!
சூர்யகுமாருக்கு எதிரணி வீரர்களின் மனதில் பயத்தை உருவாக்கும் திறமை இருக்கிறது. நாம் அவருடன் தொடர்ந்து நிலைத்திருப்பது அருமையானது என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
நானும் சூர்யாவும் இதனைச் செய்ததாலேயே எங்களால் வெற்றிபெற முடிந்தது - கேஎல் ராகுல்!
நானும் சூர்யகுமார் யாதவும் நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடிப்பது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என பேசிக்கொண்டே இருந்தோம். அதன் காரணமாகவே எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
டி20 போட்டிகளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்களோ அதேபோன்று ஒருநாள் போட்டியிலும் பாசிட்டிவாக விளையாடுங்கள் என சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் வழங்கியுள்ளார். ...
-
என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்!
இந்திய அணி நிச்சயம் சூர்யகுமார் யாதவை ஆதரித்து அவருக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, Asia Cup 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் வேண்டாம்; இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக்கோப்பை இந்திய அணியில் சூரியகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக வெளிப்படையாக சூர்யகுமார் வேண்டாம் என்கின்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகவும் சவாலானது - சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் உங்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் நான் இதற்காக பயிற்சி செய்து வருகிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமர் மிகவும் அதிர்ஷ்டமுள்ள வீரர் - டாம் மூடி விமர்சனம்!
ஆசியக் கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் சூர்யகுமாரை பார்க்கும் பொழுது அவர் அதிர்ஷ்டத்தால் இருக்கிறார் என்று தோன்றுகிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்குஎ திரான தனது அறிமுக டி20 தொடரில் விளையாடிவரும் திலக் வர்மா ஐசிசி டி20 தரவரிசையில் 46ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!
திலக் வர்மா மனதளவில் மிகவும் வலிமையானவர். நீங்கள் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் வந்து இந்திய அணிக்காக விளையாடும் பொழுது உங்களுக்கு மிகவும் தேவையான விஷயம் இதுதான் என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா சாதனையை இருமடங்கு வேகத்தில் உடைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து ...
-
சூர்யகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24