Tamil cricket
IND vs NZ: உம்ரான் மாலிக்கை பாராட்டிய முகமது ஷமி!
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டியில் அபரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15/5 என சரிந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 109 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 51 (50) ரன்களும் சுப்மன் கில் 40 (53) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்தது. மேலும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்திலும் இந்தியா வெற்றி நடை போடுகிறது.
Related Cricket News on Tamil cricket
-
ஐஎல்டி20: ஸத்ரான், பிராவோ அதிரடியில் எம்ஐ எமீரேட்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் எம்ஐ எமீரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: கோஹ்லர்-காட்மோர் அபார சதம்; ஷார்ஜா வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
SA20 League: ஈஸ்டர்ன் கேப்பை 127 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs IRE, 2nd ODI: ஜோஷுவா லிட்டில் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்கள் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சு தான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
பேட்டிங்கில் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டுவிட்டோம் - டாம் லேதம்!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாம், ஆடுகளத்திற்கு ஏற்றவாறு விளையாடாததே தங்களது படுதோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். ...
-
SA20 League: அரைசதத்தை தவறவிட்ட வெண்டர் டுசென்; பார்ல் ராயல்ஸுக்கு 143 டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
பிபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஸ்மித்; சிட்னி சிக்சர்ஸ் இமாலய வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ZIM vs IRE, 2nd ODI: தொஹானி, டெக்டர் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 294 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 294 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 2nd ODI: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 108 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வெளியேற அந்த அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு உள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தாண்டு வரவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு உள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47