Tamil
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹுப்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணிக்கு எஸ் யு கார்த்திக் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய கார்த்திக் 6 ரன்களுக்கும், கேப்டன் கருண் நாயர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கார்த்திக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் 26 ரன்களுக்கும், சுமித் குமார் 18 ரன்களுக்கும், மனோஜ் 26 ரன்களுக்கும், ஹர்ஷில் தார்மனி 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. ஹுப்லி அணி தரப்பில் எல்ஆர் குமார் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரெப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Tamil
-
ENG vs SL, 2nd Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PAK vs BAN, 2nd Test: ஃபீல்டிங்கின் போது காயமடைந்த முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டிபிஎல் 2024: ஆயூஷ் பதோனி, பிரியான்ஷ் ஆர்யா அபாரம்; சௌத் டெல்லி அணி அபார வெற்றி!
நார்த் டெல்லி அணிக்கு எதிரான டிபிஎல் லீக் போட்டியில் சௌத் டெல்லி அணியானது 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் நைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PAK vs BAN, 2nd Test: பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்; 274 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பந்து தாக்கி காயமடைந்த அசாம் கான்; அதே பந்தில் விக்கெட்டை இழந்த சோகம் - காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கயானா அணி வீரர் ஆசாம் கான் பந்து தாக்கி கீழே விழுந்த சம்பவம் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த தஸ்கின் அஹ்மத்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் தஸ்கின் அஹ்மத் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4,4,4,6 - கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பிரிட்டோரிய்ஸ் - வைரல் காணோளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் கயானா வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிரான கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
PAK vs BAN, 2nd Test: ஷான் மசூத் அரைசதம்; நிதானம் காட்டும் பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டியின் போது மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47