Team india
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழ்ந்து வரும் இந்தியா ஐசிசி தர வரிசையில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 3ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய தரமான அணியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வரும் இந்தியா பெரும்பாலான ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்ல போராடி வருகிறது.
அதே போல ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ பல ஆயிரம் கோடிகளை வருமானமாக பெறுவதால் உலகின் இதர நாடுகளை காட்டிலும் மிகவும் பணக்கார வாரியமாக இருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு ஸ்பான்ஸர்ஷிப் செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் பிரபல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து போட்டி போடுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது இந்திய அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்சி ஸ்பான்ஸராக உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் பெரிய தொகையை செலுத்தி பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
Related Cricket News on Team india
-
WTC 2023: தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜெய்ஸ்வாலுக்கு டிப்ஸ் கொடுத்த விராட் கோலி; வைரல் புகைப்படங்கள்!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள், டி20 தொடரில் ரோஹித், கோலி போன்ற மூத்த வீரா்களுக்கு ஓய்வளித்து பாண்டியா தலைமையிலான 2ஆம் நிலை அணியை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WTC 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணியிலிருந்து வெளியேறிய அணிகள் வரை ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ...
-
உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - பிரெட் லீ!
உம்ரான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் முன்னேற்றம் காண முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டார் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். ரசிகர்களும் தற்போது அதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ...
-
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் பிரித்வி ஷா ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி எடுத்துள்ள மோசமான முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்வுக்குழுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ...
-
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிவித்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த தகவலை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47