The cricket
துலீப் கோப்பை 2024: அகர்வால், பிரதாம் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்திய ஏ அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தொடங்கிய மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், ஷம்ஸ் முலானி - தனூஷ் கோட்டியான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனூஷ் கோட்டியான் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரஷித் கிருஷ்ணா 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்தியா ஏ அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷம்ஸ் முலானி 89 ரன்களில் நடையைக் கட்ட, இந்தியா ஏ அணி 290 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on The cricket
-
கண்ணாடியுடன் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர்; டக் அவுட் ஆன பரிதாபம் - வைரல் காணொளி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தனது 'CALMEST' லெவனை தேர்வு செய்த ஸ்ரீசாந்த்; கம்பீர், கோலிக்கு இடம்!
தனது ஆல் டைம் லெவன் (அமைதியான) அணியை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார். ...
-
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
புவனேஷ்வர் குமாரின் மெய்டன் சாதனையை உடைத்த முகமது அமீர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய வீரர்கள் பட்டியல் பாகிஸ்தானின் முகமது அமீர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா; கேப்டனாக தோனி நியமனம்!
இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல் டைம் சிறந்த ஒருநாள் அணியின் லெவனை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். ...
-
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் லூசியா கிங்ஸ் அணி வீரர் சாத்ராக் டெஸ்கார்ட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். ...
-
என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - மேத்யூ ஷார்ட்!
இப்போது டேவிட் வார்னர் வெளியேறிவிட்டார், நான் உண்மையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடக்க ஆட்டக்காரராக என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என மேத்யூ ஷார்ட் தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இஷான் கிஷன், இந்திரஜித் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா சி அணி!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24