The elite
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கியது. இத்தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியானது ஆரம்பம் முதலே தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் அர்பித் வசவதாவின் அரைசதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 203 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அர்பித் வசவதா 62 ரன்களைச் சேர்த்திருந்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், முகமது, கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on The elite
-
மாரடைப்பால் கலமான பிரபல கிரிக்கெட் நடுவர்!
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஆசத் ரவுஃப் மாரடைப்பு காரணமாக காலமானார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24