The royals
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?
உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களது தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேற்கொண்டு எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
Related Cricket News on The royals
-
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்களுக்கு ஏலத்திற்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ் அணி. ...
-
எஸ்ஏ20 2025: அணிகள் தக்கவைத்த, வாங்கிய மற்றும் விடுவித்த வீரர்களின் விவரம்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தங்கவைத்த, புதிதாக வாங்கிய மற்றும் அணியில் இருந்து விடுவிடுத்த வீரர்களின் முழு விவரத்தை இப்பதிவில் காணலாம். ...
-
எஸ்ஏ20 2025: சாம் ஹைன், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பார்ல் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் சாம் ஹைன் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்தார் தினேஷ் கார்த்திக்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மீண்டும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்?
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யும் பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனில் பார்ல் ராயல்ஸ் அணியானது இங்கிலாந்தின் ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன் - ரியான் பராக்!
எனது அணி என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்ந்து ஆதரித்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் இந்த சீசன் மூலம் பூர்த்தி செய்துள்ளேன் என்று ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஷேன் வார்னேவின் சாதனையை சமன்செய்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த வீரர்கள் வரிசையில் ஷேன் வார்னேவின் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். ...
-
ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிக்கிறது - ஷேன் வாட்சன்!
தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நல்லதல்ல என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு சாம்சன் திறம்பட வழிநடத்தி வருகிறார் - ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு!
நடப்பு ஐபிஎல் தொடரில் அழுத்தமான சூழல்களிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47