The super
பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக அந்த வீரரை வாங்கிவிட்டது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுக்கட்டாயமாக டிரேடிங் முறையில் வாங்கியது. குறிப்பாக தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்த பாண்டியாவை குஜராத் அணி ஆரம்பத்திலேயே தக்க வைத்தது.
ஆனால் 5.25 மணிக்கு குஜராத் தக்க வைத்த அவரை இரவு 7.25 மணிக்கு மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் வங்கியில் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் பிரபல திரைப்படமான மணி ஹைஸ்ட் போல ஹர்திக் பாண்டியாவை திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா ஷெப்ஃபர்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.
Related Cricket News on The super
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் குயிட்டா கிளாட்டியேட்டர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
எம் எஸ் தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி ரன் குவிக்கிறேன் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
-
தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்!
தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது என தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தோனி எப்போதுமே தனது வார்த்தையிலிருந்து பின் வாங்கமாட்டார் - காசி விஸ்வநாதன்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கான விளக்கத்தை தற்போது சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
வரும் ஐபிஎல் 2024 தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ அணியிலிருந்து விலகும் கவுதம் கம்பீர்?
ஐபிஎல் 2024ஆம் அண்டு தொடருக்கு முன்னதாக லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீர் அந்த அணியிலிருந்து விலகி கேகேஆர் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்!
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
எம்எல்சி 2023: போட்டி ஆட்டவணை; முதல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் - நைட் ரைடர்ஸ் மோதல்!
அமெரிக்காவில் தொடங்கப்படவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் நாளை தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ...
-
எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!
அமெரிக்காவில் தொடங்கியுள்ள மேஜர் லீக் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அம்பாதி ராயுடு திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டிங் லங்கர்?
ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும் - எம்எஸ் தோனி!
எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை, சென்னை அணியின் தீபக் சஹர் 50 வயதில் தான் எட்டுவார் என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலாய்த்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47