Trent boult
சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதன்படி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on Trent boult
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள்: தனித்துவ சாதனை படைத்த போல்ட்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புவனேஷ்வர் குமார் சாதனையை டிரென்ட் போல்ட் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் அதிகமுறை ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: போல்ட், சஹால் அசத்தல் பந்துவீச்சு; 125 ரன்களில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 126 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்; அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் போல்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன் - டிரென்ட் போல்ட்!
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடினால், எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் அளிக்க முடியும் என்று டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
ENG vs NZ, 3rd ODI: பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENG vs NZ, 3rd ODI: இரட்டை சதத்தை தவறவிட்ட பென் ஸ்டோக்ஸ்; நியூசிலாந்துக்கு 369 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 369 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47