With hardik
ஐபிஎல் 2024: போல்ட், சஹால் அசத்தல் பந்துவீச்சு; 125 ரன்களில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தொடர்க்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய இளம் அதிரடி வீரர் நமன் திர்ரும் முதல் பந்திலேயே டிரென்ட் போல்டிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் டேவால்ட் ப்ரீவிஸும் தனது முதல் பந்தில் ஆட்டமிழந்து டிரென்ட் போல்டிடம் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்ட அனுகுமுறையில் விளையாடி வந்த இஷான் கிஷான் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on With hardik
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
இறுதிக்கட்டத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டதால் கொஞ்சம் தடுமாறினோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹர்த்திக் பாண்டியாவிடம் கோபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சக வீரர் ரோஹித் சர்மா கோபமாக பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவை கட்டித்தழுவிய ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா கட்டித்தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
‘எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ - விலகலுக்கான காரணத்தை கூறிய பெஹ்ரன்டோர்ஃப்!
கடந்த வாரம் தனது எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டு சீசனிலிருந்து விலகியதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய பெஹ்ரன்டோர்ஃப்; அணியில் சேர்க்கப்பட்ட லுக் வுட்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக லுக் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா கேப்டன்சியில் மும்பை அணி என்ன சாதித்ததோ, இனிமேல் அதனை நான் முன்னெடுத்துச் செல்கிறேன் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை தடுக்க ஒருபோது முயற்சிக்கவில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!
தங்கள் அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றதை தடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான டிஒய் பாட்டில் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா ரிலையன்ஸ் ஒன் அணியின் கேப்டானக செயல்படவுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவது ரோஹித் சர்மா தான் - ஜெய் ஷா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். ...
-
பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
காயத்திலிருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24