%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
CWCL 2: எட்வர்ட்ஸ், வான் மீகெரன் அசத்தல்; கனடாவை பந்தாடியது நெதர்லாந்து!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கும், விக்ரம்ஜித் சிங் 25 ரன்களுக்கும், முசா அஹ்மத் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன திரும்பினர்.
பின்னர் இணைந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் - நோஹா கிராஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த நோஹா கிராஸ் 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷரிஸ் அஹ்மத் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்காட் எட்வர்ட்ஸும் 72 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
-
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: மொனாங்க் படேல், கென்ஜிகே அசத்தல்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டிற்கு ஓய்வு கொடுத்த மார்னஸ் லபுஷாக்னே!
இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஷாக்னே அரைசதம் அடிக்க உதவிய பேட்டிற்கு ஓய்வு கொடுப்பதாக அவர் தனது சமூகவலைதள பதிவில் தெர்வித்துள்ளார். ...
-
ENG vs WI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
ரோஹித் சர்மா தலைமையில் அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவிய கிளாமோர்கன்; அசத்தலான கேட்சை பிடித்த ஜேம்ஸ் பிரேசி - வைரலாகும் காணொளி!
குளஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இறுதிவரை போராடிய கிளாமோர்கன் அணி கடைசியில் விக்கெட்டை இழந்து போட்டியை சமந்துசெய்து சாதனை படைத்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!
கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி தனிநபர் விருதுகளை வென்ற முதல் வீரர் எனும் சாதனையை படைத்து இந்திய அணியின் நசத்திர வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். ...
-
இந்தியா - வங்கதேசம், பயிற்சி ஆட்டம் - நேரலை & அணி விவரங்கள்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; அட்டவணையை அறிவித்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24