bangladesh cricket board
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகாலமாக நடைபெற உள்ளது. அதற்காக உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வரும் நிலையில், அண்டை நாடான வங்கதேசம் சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 5ஆம் தேதியான நேற்று தொடங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் கேப்டனாக இருக்கும் நட்சத்திர வீரர்கள் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தின் நட்சத்திர வீரரான அவர் கடந்த ஒரு வருடமாகவே கை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயத்தை சந்தித்து பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் விளையாடாத அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான முடிவை எடுத்தார்.
Related Cricket News on bangladesh cricket board
-
ஐபிஎல்-லை புறக்கணித்த வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு!
2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டாலர் இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ...
-
ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா - வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். ...
-
சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
-
எல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்!
மைதானத்தில் சர்ச்சைகுரிய முறையில் நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனிற்கு தாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24