Advertisement

grace harris

WPL 2024: கிரேஸ் ஹாரிஸ் அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
Image Source: Google
Advertisement

WPL 2024: கிரேஸ் ஹாரிஸ் அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!

By Bharathi Kannan March 01, 2024 • 22:19 PM View: 170

இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் டபிள்யூபிஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். சிறப்பாக தொடங்கிய இந்த இணையில் பெத் மூனி 16 ரன்களுக்கும், லாரா வோல்வேர்ட் 28 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 24 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

Advertisement

Related Cricket News on grace harris