ms dhoni
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக்கோப்பையில் அறிமுகத் தொடரிலேயே 523 ரன்கள் குவித்து மாபெரும் உலக சாதனை படைத்த நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை முதல் வீரராக 1.80 கோடிக்கு வாங்கியது.
அதை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் சதமடித்து அபாரமாக செயல்பட்ட மற்றொரு நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்சேலை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய சென்னை அணி, இந்தியாவைச் சேர்ந்த ஷர்தூள் தாக்கூரையும்வாங்கியது. இந்த நிலைமையில் சமீர் ரிஸ்வி எனும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரை 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
Related Cricket News on ms dhoni
-
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டால் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி நிறைய அனுபவத்தை கற்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்று கோட்ஸி கூறியுள்ளார். ...
-
தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-க்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ!
சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து தோனியின் ஜெர்சி நம்பரான 7-க்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இனி எந்த வீரருக்கும் நம்பர் 7 ஜெர்சி எண்ணாக வழங்கப்படாது என்று தெரிய வந்துள்ளது. ...
-
தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!
சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
எம் எஸ் தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி ரன் குவிக்கிறேன் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
-
தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்!
தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது என தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பொய்யான செய்தியில் என்னுடைய பெயரை சேர்க்காதீர்கள் - அஸ்வின் காட்டம்!
சென்னையின் அடுத்த கேப்டனாக கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இருப்பார் என்று தாம் சொன்னதாக வைரலான செய்தி பொய்யானது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
தோனி எப்போதுமே தனது வார்த்தையிலிருந்து பின் வாங்கமாட்டார் - காசி விஸ்வநாதன்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கான விளக்கத்தை தற்போது சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
வரும் ஐபிஎல் 2024 தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியின் ரன் அவுட்டக்கிற்காக இன்றளவும் அவரது ரசிகர்கள் திட்டிவருகின்றனர் - மார்ட்டின் கப்தில்!
நான் தோனியை ரன் அவுட் செய்ததிலிருந்து இந்திய ரசிகர்களுக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது. இன்றளவும் தோனியின் ரசிகர்கள் அவரை ஏன் ரன் அவுட் செய்தீர்கள்? என்று என்னை திட்டி தீர்த்தவாறு மெயில் அனுப்பி வருவதாக நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இருநாட்டு பிரதமர்கள், மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அழைப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியைக் காண இருநாட்டு பிரதமர்கள் மற்றும் உலகக்கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24