shahrukh khan
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் விருத்திமான் சஹா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஷுப்மன் கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்ததன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்பிளே முடிவில் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்து தூக்கி அடித்த ஷுப்மன் கில் 16 ரன்களோடு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷாரூக் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on shahrukh khan
-
நான் டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகன் - ஷாருக் கான்!
அடுத்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஷாருக் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023: ஆரஞ்சு & பர்பிள் தொப்பியை தட்டிச்சென்ற ஷாருக், அஜித்தேஷ்!
டிஎன்பிஎல் தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார். ...
-
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கோவை!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பில் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட சுதர்சன்; நெல்லை அணிக்கு 182 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
TNPL 2023: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஷாருக், பிரார் இறுதிநேர அதிரடியில் 179 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் - சாம் கரண்!
ஷாருக் கான் சற்று ஆபத்தான வீரர் தான். அவரது ரோல் அணியில் மிகவும் முக்கியம். இதுபோன்ற பல வெற்றிகளை பெற்று தருவார் என்று ஷாம் கரன் பெருமிதமாக பேசி உள்ளார். ...
-
எங்களது நடுவரிசை பேட்டிங் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமாக இருந்தது - ஷாருக் கான் !
நான் எனது மனதை தெளிவாக வைத்திருக்க முயற்சி செய்தேன். என்னுடைய பயிற்சிகள் இப்படி விளையாடுவதற்கு பலனளித்தது என் பஞ்சாப் கிங்ஸின் ஷாருக் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்த விராட் கோலி, அண்மையில் வெளியாகிய பதான் பட பாடலுக்கு அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24