An indian
4,6,6,6,4,6 - நோர்ட்ஜே ஓவரில் தாண்டவமாடிய செஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைக் குவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி 6 ஓவர்களில் 75 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், இஷான் கிஷன் 42 ரன்களுக்கும், திலக் வர்மா 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on An indian
-
ஐபிஎல் 2024: சுனில் நரைன், ரகுவன்ஷியை பாராட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!
இப்போட்டியில் நாங்கள் முதலில் 210 அல்லது 220 ரன்கள் எடுப்போம் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் 270 ரன்கள் எடுப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ரஸலை நிலைகுலைய வைத்த இஷாந்த் சர்மா - வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா வீசிய அபாரமான யார்க்கர் பந்து குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இது தொடரின் ஆரம்பம் மட்டுமே - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த அனுஜ் ராவத்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சி முகாமில் இணைந்த ஆண்ட்ரிச் நோர்ட்ஜே!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே இன்று சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று தான் நினைத்தேன், ஆனால் ரஸல் தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 சிக்ஸர்களை விளாசிய 9ஆவது வீரர் எனும் சாதனையை கேகேஆர் அணியின் ஆண்ட்ரே ரஸல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில்லுடனான மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார். ...
-
நூறாவது டெஸ்ட் போட்டியில் சாதனைகள் குவித்த அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். ...
-
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47