B sai sudharsan
ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 16 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெண்ட்டும் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
Related Cricket News on B sai sudharsan
-
ஷார்ட் பந்துகளை விளையாட கடினமாக இருந்தது - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் நாங்கள் எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க விரும்பினோம் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 168 ரன்களில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs IND, 3rd ODI: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்ற சாய் சுதர்ஷன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இம்பேக்ட் ஃபீல்டருக்கான விருதை தமிழ்நாட்டின் சாய் சுதர்ஷன் வென்று அசத்தியுள்ளார். ...
-
தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட வேண்டியது அவசியம் - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் சீரான இடைவெளியில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை விட்டதால் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd ODI: டோனி டி ஸோர்ஸி அபார சதம்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs IND, 2nd ODI: சாய் சுதர்ஷன், கேஎல் ராகுல் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். ...
-
முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!
ஒவ்வொரு குழந்தைகளும் நாட்டுக்காக விளையாடி அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கனவுடனேயே கிரிக்கெட்டில் விளையாட தொடங்குவார்கள் என தனது அறிமுக போட்டியில் அரைசதமடித்த சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற கேஎல் ரகுல் உத்வேகமளித்தார் - அர்ஷ்தீப் சிங்!
இப்போட்டியில் தம்மால் 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24