Cricket team
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இந்திய அணி 59.52 சதவீத புள்ளிகளுடன் இப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்திய அணி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Related Cricket News on Cricket team
-
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இத்தோல்வியின் மூலம் நாங்கள் 1-2 என்ற கணக்கில் இத்தொடரில் பின் தங்கி இருந்தாலும், எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட், மேட் ஹென்றி ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
குடும்ப சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜார முதல் தர கிரிக்கெட்டில் தனது 63ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
பீகார் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டிலிருந்து குடும்ப சூழல் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் பதியிலேயே விலகியுள்ளார். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அனில் கும்ப்ளே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்து ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த சாதனையை தனது அப்பாவிற்காக சமர்பிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
தனது அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். ...
-
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் ஜார்கண்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
மார்க் வுட் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ஜுரெல்; வைரலாகும் காணொளி!
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் துருவ் ஜுரெல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பந்துவீச்சில் பயமின்றி சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47