Delhi capitals
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் தனது காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கினர்.
Related Cricket News on Delhi capitals
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டு நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடும் இந்திய வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஓர் பார்வை!
ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது. ...
-
குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக, எனது மனநலம் மற்றும் எனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொண்டேன், உண்மையாகச் சொல்வதானால், குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு மாற்றாக அந்த அணி எந்த வீரரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஹாரி ப்ரூக் அறிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளார் - ஷிகர் தவான்!
கடினமான சூழலில் இருந்து தனது பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றால் ரிஷப் பந்த் மீண்டு வந்துள்ளதாக இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் - பிசிசிஐ!
ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
இதனை செய்தால் ரிஷப் பந்த் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இருப்பார் - ஜெய் ஷா!
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தால் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் பட்சத்தில் அவர் நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வில் இருப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய என்சிஏ!
வரவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கார் விபத்தில் சிக்கி காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான அனுமதியை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது. ...
-
தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
கடந்த சீசனில் கோப்பையை தவறவிட்ட மரிஸான் கேப் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்!
ரிஷப் பந்த இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இன்னும் 100% குணமடையவில்லை - ரிஷப் பந்த்!
வேகமாக குணமடைந்து வரும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24