Dhoni
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
கடந்த 2019, ஜூலை 11ஆம் தேதி இங்கிலாந்தின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி. மழையின் காரணமாக இரண்டாவது நாளாக தொடர்ந்த ஒருநாள் போட்டி. இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி களத்தில் இருக்கிறார். அடுத்த ஓவரை வீச நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் தோனியின் ஆஸ்தான ட்ரேட்மார்க் ஷாட்டான பேக்வார்டு பாய்ண்ட் திசையில் சிக்சர். 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அடுத்த பந்து யார்க்கர். ரன்கள் ஏதும் இல்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்கொயரில் தட்டிவிட்டு தோனியின் கால்கள் வேகம் எடுக்கின்றன. முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்காக ஓடி வரும் போது, கப்தில் சரியாக ஸ்டெம்புகளில் டைரக்ட் ஹிட் அடிக்கிறார்.
பொதுவாக எவ்வித சலனமும் இல்லாமல் தோனியின் முகம் காணப்படும். ஆனால் அன்று, மூன்றாவது நடுவரின் தீர்ப்பைப் பார்த்ததும் தலை குனிந்தவாறு களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறுகிறார். இந்தியாவுக்கே அன்று ஹார்ட் அட்டாக் தான். உலகக்கோப்பைக் கனவு பறிபோனது. கமெண்ட்ரியில் ”இது நிஜம் தானா...தோனி கடைசியாக மைதானத்தை விட்டு வெளியேறுகிறாரா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மைதானத்தில் இருந்த அனைவரும் தோனிக்காக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
Related Cricket News on Dhoni
-
சிஸ்கேவுக்கு இந்த விஷயம் தலைவலி தான் - சிஇஓ காசி விஸ்வநாதன்!
இந்தியாவில் நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக ...
-
தோனி குறித்து புவி கூறிய கருத்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர்குமார் புகழ்ந்துள்ளார். ...
-
#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று. ...
-
உலகில் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்திய கோலி!
இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
தோனிக்கு பதில் எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என்று நினைத்தேன் - யுவராஜ் ஓபன் டாக்!
தோனிக்கு முன்பாக தனக்கு கேப்டன்சி அளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார். ...
-
தோனியைப் பற்றி தவறாக கணித்த நோர்ட்ஜே!
2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்று அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார். ...
-
அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது - ரசிகர்களின் நெஞ்சை அள்ளிய ரஷீத்!
தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடம் அதைப்பற்றி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை - ருதுராஜ் கெய்க்வாட் கூறிய சுவாரஸ்ய தகவல்!
ஓய்வு அறிவிப்பு குறித்து தோனியிடம் கேட்பதற்கு எந்தவொரு வீரருக்கும் தைரியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
சிஸ்கேவின்‘சுட்டி குழந்தை’ சாம் கரண் #HBDSamcurran
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரண் இன்று தனது 23ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
தோனியை தேர்வு செய்வதில் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் - கிரண் மோரே
முன்னாள் கேப்டன் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சௌரவ் கங்குலியிடம் 10 நாள்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என முன்னாள் தேர்வு குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். ...
-
‘சீ யூ சூன் துபாய்’ வைரலாகும் சின்ன தல ட்வீட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
பீட்டர்சன்னை கலாய்த்த தோனி - நினைவுகளை பகிரும் உத்தப்பா!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலாய்த்தது குறித்த நினைவுகளை சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார். ...
-
இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன் இவர்தான் - மைக்கேல் வாகன்
தோனி மற்றும் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24