Advertisement
Advertisement
Advertisement

Eng vs

பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
Image Source: Google
Advertisement

பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!

By Bharathi Kannan September 04, 2024 • 20:51 PM View: 67

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில்,  இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய நிலையில் கயமடிந்தர். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமானதை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

Related Cricket News on Eng vs