Fa cup
ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி!
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய நேபாள அணியில், 17 வயதான குல்ஷன் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது, மேலும் அந்த அணி குரூப் ஏ வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
Related Cricket News on Fa cup
-
ஆசிய கோப்பையை தவிர்க்கும் இந்தியா?
ஆசியக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் காலகட்டத்தில் பிசிசிஐ ஐந்து நாடுகளை வைத்து புதிதாக ஒரு தொடரை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பை நியூசி அணியில் இடம்பெறும் கேன் வில்லியம்சன்!
வரவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சையை முடித்த ஸ்ரேயாஸ்; உலகக்கோப்பைக்கு ரெடி?
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
மார்ட்டின் கப்திலை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் - இயன் ஸ்மித்!
இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் சீனியர் வீரர் மார்டின் கப்திலை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கருத்து கூறியுள்ளார். ...
-
சென்னையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி? ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை போட்டியை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலில் நடத்த முன்மொழிவை வழங்கியுள்ளோம் - நஜாம் சேதி!
ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு மற்ற போட்டிகளை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை தவறவிடும் வில்லியம்சன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபில் தொடரின் முதல் போட்டியில் ஏற்பட்ட காயத்தினால், இந்த வருடம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையையும் கேன் வில்லியம்சன் தவறவிடுவார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தானிடையே நீடிக்கும் இழுபறி!
ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5 முதல் தொடக்கம்; 12 மைதானங்கள் தேர்வு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் என்றும், 12 மைதானங்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மிகப்பெரிய பிரச்சினைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - ஆரோன் ஃபிஞ்ச்!
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த முறை வெல்வது சற்று கடினம் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: பிரதமரிடம் கோரிக்கை விடுத்த ஷாஹித் அஃப்ரிடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47