If kohli
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து அசத்தினார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்ததன் மூலம், இந்தியா-இங்கிலாந்து டி-20 சர்வதேசப் போட்டிகளில் அதிக முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 முறை 50+ ஸ்கோரை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோஸ் பட்லரும் 5 முறை 50+ ஸ்கோரை அடித்து அவரின் சாதனையை சமன்செய்துள்ளார்.
Related Cricket News on If kohli
-
ரஞ்சி கோப்பை 2024-25: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் விராட் கோலி!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: அடுத்த சுற்று போட்டிகளில் விராட், ராகுல் பங்கேற்பதில் சிக்கல்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்று போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. \ ...
-
ரஞ்சி கோப்பை அணியில் இணைந்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் டெல்லி ரஞ்சி அணியிலும், ஷுப்மன் கில் பஞ்சாப் ரஞ்சி அணியில் இணைந்துள்ளனர். ...
-
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
-
IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!
இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை தொடருக்கு நான் தேர்வு செய்யப்பட்டால் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புவதாக விராட் கோலி தன்னிடம் கூறியதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளராக தொடரும் கம்பீர்; இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஃபார்மின் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இருவரும் இங்கிலாந்து தொடரில் விளைடாடுவார்கள் என்று கூறப்படுகிறது. ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சோபிக்க தவறிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் மீதும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
5th Test, Day 1: மீண்டும் சொதப்பிய டார் ஆர்டர்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி தொடர் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24