In india
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இத்தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
இருப்பினும் இவ்விரு வீரர்களும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்திய அணியானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வருகிறது. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on In india
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொட்ரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். ...
-
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. ...
-
அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்தது எப்படி? - இந்தியா மீது இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றஞ்சாட்டியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் பாகிஸ்தானின் பாபர் ஆசமின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
ZIM vs IND: இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் சமூக வலைதள பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வரும் நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம், நியூசிலாந்து & இங்கிலாந்து!
வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ள நிலையில், அத்தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47