Indian
ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான் - சௌரவ் கங்குலி!
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ தனது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளது. காரணம் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே இஷான் கிஷானை இந்திய டி20 அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ள பிசிசிஐ, இங்கிலாந்து க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயரையும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது. அதன்பின் இருவரையும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் இஷான் கிஷான் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக ஹர்திக் பாண்டியாவுடன் பயிற்சி மேற்கொண்டார். அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர் கயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலக முயற்சித்தார். இதனால் கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரையும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Related Cricket News on Indian
-
கும்ப்ளே, வார்னே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐந்தாவது டெஸ்ட்: கேஎல் ராகுல் விலகல்; வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்?
இனி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.75 லட்சமும், ஓரண்டு முழுவது சர்வதேச டெஸ்ட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ரூ.15 கோடியும் சமபளமாக வழங்க பிசிசிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - ஸ்ரேயாஸ், இஷானுக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி!
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சவால்களை எதிர்கொண்டு வலுவாக திரும்பு வாருங்கள் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
நடப்பாண்டிற்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ...
-
ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!
ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக வீரர்கள் புகாரளித்துள்ளார்கள் என்று ஆந்திரா கிரிக்கெட் சங்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு முன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு; பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்திய அணியின் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி ஊக்கத் தொகையும் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47