Indian cricket
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
கடந்த 2019, ஜூலை 11ஆம் தேதி இங்கிலாந்தின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி. மழையின் காரணமாக இரண்டாவது நாளாக தொடர்ந்த ஒருநாள் போட்டி. இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி களத்தில் இருக்கிறார். அடுத்த ஓவரை வீச நியூசிலாந்து அணியின் ஃபெர்குசன் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் தோனியின் ஆஸ்தான ட்ரேட்மார்க் ஷாட்டான பேக்வார்டு பாய்ண்ட் திசையில் சிக்சர். 11 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அடுத்த பந்து யார்க்கர். ரன்கள் ஏதும் இல்லை. அந்த ஓவரின் மூன்றாவது பந்து, ஸ்கொயரில் தட்டிவிட்டு தோனியின் கால்கள் வேகம் எடுக்கின்றன. முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னுக்காக ஓடி வரும் போது, கப்தில் சரியாக ஸ்டெம்புகளில் டைரக்ட் ஹிட் அடிக்கிறார்.
பொதுவாக எவ்வித சலனமும் இல்லாமல் தோனியின் முகம் காணப்படும். ஆனால் அன்று, மூன்றாவது நடுவரின் தீர்ப்பைப் பார்த்ததும் தலை குனிந்தவாறு களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறுகிறார். இந்தியாவுக்கே அன்று ஹார்ட் அட்டாக் தான். உலகக்கோப்பைக் கனவு பறிபோனது. கமெண்ட்ரியில் ”இது நிஜம் தானா...தோனி கடைசியாக மைதானத்தை விட்டு வெளியேறுகிறாரா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மைதானத்தில் இருந்த அனைவரும் தோனிக்காக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
Related Cricket News on Indian cricket
-
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - இலங்கை தொடர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த முன்னாள் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதே எனது லட்சியம் - குல்தீப் யாதவ்!
இலங்கை தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஒருவேளை ரோஹித் கேப்டனானால், இவர்களின் கதை அவ்வளவு தான்..!
ஒரு வேளை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், நிச்சயம் அணியில் உள்ள சில வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த தொகுப்பை இப்பதிவில் காண்போம். ...
-
ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம் - கேன் வில்லியம்சன்
ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அது அவர்களின் திறனை குறைக்காது. இந்திய அணி உண்மையிலேயே மிகச்சிறந்த அணி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கிராமத்தில் குப்பைகளைக் கொட்டி வசமாக சிக்கிய ஜடேஜா!
பக்கத்து கிராமத்தில் குப்பைகளை கொட்டியதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, கிராம தலைவரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் கட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்காக காத்திருக்கும் பிசிசிஐ!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்கான வேலையில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணி கவலையடைய தேவைவில்லை - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் சிராஜின் இடம் உறுதி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிற்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ...
-
இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47