Ipl 2023
காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரது அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
அதிலும், கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக குஜராத் அணி ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை களமிறங்கியது.
Related Cricket News on Ipl 2023
-
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இறுதிகட்டத்தில் விலகும் மார்க் வுட்; பதற்றத்தில் லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது - அக்ஸர் படேல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கில் சோபிக்க தவறி விட்டோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பிளேயிங் லெவனில் இருந்த அனைத்து ஆர்சிபி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
பேட்டிங்கில் ஒழுங்காகவே செயல்படவில்லை ஆனாலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 144 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஓரே ஒவரில் டெல்லியை காலி செய்த வாஷிங்டன் சுந்தர்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் . ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அட்வைஸ் வழங்கிய முகமது கஃப்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் படுமோசமாக விளையாடி படுதோல்விகளை சந்தித்துவரும் நிலையில், அந்த அணிக்கு முகமது கைஃப் முக்கியமான அறிவுரை கூறியுள்ளார். ...
-
'ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களைச் செய்தால் அது பலிக்காது': கேகேஆர் அணி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
நிதீஷுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால், அவர் விரும்பும் அணியை உருவாக்கினால், நிறைய விஷயங்களை கேகேஆர் அணியால் தீர்க்க முடியும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா நடனம்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24