La knight riders
124 மீ சிக்ஸரை விளாசிய நைட் ரைடர்ஸ் வீரர்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கயானா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் நட்சத்திர வீரர்கள் கெவின் சின்க்ளேர் 9, கேப்டன் ஷாய் ஹோப் 5, ஷிம்ரான் ஹெட்மையர் 7, மொயீன் அலி 11 ரன்களுக்கு என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஜோடி சேர்ந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் - டுவைன் பிரிட்டோரியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் 21 ரன்களையும் சேர்க்க, கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on La knight riders
-
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
6,0,4,4,6: அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய குயின்டன் டி காக்; வைரலாகும் காணொளி!
நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!
நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர்கள் ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் இருவரும் இணைந்து பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிரது. ...
-
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசிய கிங்ஸ் வீரர் அல்ஸாரி ஜோசப் கள நடுவரிடம் ஆவேசமாக நடந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் - நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கீரன் பொல்லார்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24