Mr icc
வெற்றி கொண்டாட்டத்தை முடித்த கையோடு லண்டன் புறப்பட்ட விராட் கோலி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வெற்றி அணிவகுப்பையும் மேற்கொண்டது.
Related Cricket News on Mr icc
-
இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து பாடிய ‘வந்தே மாதரம்’ பாடல் - ரசிகர்களை சிலிர்க்க வைத்த காணொளி!
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் - ஓய்வு குறித்து பும்ராவின் பதில்!
நான் தற்போது தான் தொடங்கியுள்ளேன், அதனால் எனது ஓய்வுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது என இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்து வீச்சாளர்- விராட் கோலி புகழாரம்!
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்துவீச்சாளர். அவர் இந்திய அணிக்காக விளையாடுவது எங்களின் அதிர்ஷ்டம் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களுக்கு வழங்கினார். ...
-
ரசிகர்கள் முன் நடனமாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா - வைரலாகும் காணொளி!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மைதானத்தில் நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
-
பிரதமர் மோடிக்கு பிரத்யேக ஜெர்ஸியை பரிசளித்த பிசிசிஐ!
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா அகியோர் இணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்ஸியை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். ...
-
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
கோப்பையை வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்ட சஞ்சு சாம்சன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ளார். ...
-
தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன்பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது லாகூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் படுக்கை மெத்தையை வைத்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24