Rashid khan
T20 WC 2024: ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் ஆபார வெற்றி!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி காளமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய இப்ராஹிம் ஸத்ரான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டத்தில் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Rashid khan
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கான் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இன்றைய போட்டியில் எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது - ஷுப்மன் கில்!
இன்றைய போட்டியில் நாங்கள் இழந்த விக்கெட்டுகள் அனைத்தும் எங்களது மோசமான ஷாட் தேர்வினால் மட்டும் தான் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்துவீசியதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்!
இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த நான் விளையாட்டை முடிக்க விரும்பினேன், ஆனால் எனது வேலையை ராகுல் மற்றும் ரஷித் இருவரும் செய்து முடித்துள்ளனர் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து. ...
-
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை சொல்லி எடுத்த ரஷித் கான் - வைரல் காணொளி!
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 163 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அறிமுக போட்டியில் அதிரடி காட்டிய சமீர் ரிஸ்வி -வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி சிக்ஸர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ...
-
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ...
-
AFG vs IRE, 3rd T20I: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இணையத்தில் பரவும் ரஷித் கானின் ‘நோ-லுக்’ சிக்சர்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அடித்த சிக்சரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47