Rr ipl
இந்த தோல்வி எங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியானது தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் சாம் கரன் 55 ரன்களையும், ஹர்ப்ரீத் பாட்டியா 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே குவிக்க 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Related Cricket News on Rr ipl
-
இரண்டு பந்துகளில் 60 லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில், ஸ்டம்புகளை உடைத்தெறிந்தது குறித்த காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
இதுபோன்ற ஒரு வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
இந்த வெற்றி முழுக்க முழுக்க எங்களது அணியின் அனைத்து வீரர்களையும் சாரும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. ...
-
ஐபிஎல் 2023: க்ரீன், சூர்யா அதிரடி வீண்; அர்ஷ்தீப் சிங் வேகத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மைதானத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்!
மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மைதானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ...
-
லக்னோ அணியை விளாசிய வெங்கடேஷ் பிரசாத்!
எளிதில் வெற்றிபெற வேண்டிய போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாம் கரண் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை - கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியதற்கான காரணத்தை கேஎல் ராகுல் விளக்கியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் கோலியைப் பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்த கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச டி20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மோஹித் சர்மா 2.0; லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் காயமடைந்த ஸ்டோக்ஸ், ரசிகர்கள் அதிருப்தி!
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரராகப் பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் தடவல் பேட்டிங்; லாக்னோவுக்கு எளிய இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் - ரவி சாஸ்திரி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா வெகு விரைவிலேயே இந்திய அணிக்குள் இடம் பெறுவார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
எனக்கு ஏன் பெஸ்ட் கேட்ச் விருது கொடுக்கவில்லை - எம் எஸ் தோனி!
ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்த போதும், அவருக்கு சிறந்த கேட்ச் விருது ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியை தோனியே கேட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24