Sa vs pak
டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்பட்ட வங்கதேச அணி!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் சௌத் சகீல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Sa vs pak
-
PAK vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கபட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் - லிட்டன் தாஸ்!
போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் இருதரப்பு தொடர் குறித்த அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
நாங்கள் கம்பேக் கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு - நசீம் ஷா!
சர்வதேச கிரிக்கெட்டில் எங்களது கம்பேக் சிறப்பாக இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs BAN: பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; சௌத் ஷகீலுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் புதிய துணைக்கேப்டனாக சௌத் சகீல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது - ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்; ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - தகவல்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை பொது இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்தியாவைத் தவிர்த்து இன்னும் பல சிறந்த அணிகள் உள்ளன என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது. ...
-
யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை - சர்ச்சை காணொளி குறித்து ஹர்பஜன் சிங் விளக்கம்!
இணையத்தில் வைரலான சர்ச்சை காணொளியானது தொடர்ந்து நாங்கள் 15 நாள்கள் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை என ஹர்பஜன் சிங் விளக்கமளித்துள்ளார். ...
-
WCL 2024: பாகிஸ்தான் சம்பியன்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய சாம்பியன்ஸ்!
World Championship of Legends 2024: பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது லாகூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24