Shreyas iyer
WI vs IND, 2nd ODI: அக்ஸரின் அதிரடி அரைசதம்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப்புடன் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அரைசதம் அடித்த பூரன் 77 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
மிகச்சிறப்பாக பேட்டிங் சேய்த ஷாய் ஹோப் சதமடித்தார். ஹோப்பும் பூரனும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். சதமடித்த ஹோப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹோப்பின் சதம், பூரனின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 311 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையடுத்து 312 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் மிக மந்தமாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார்.
3ஆம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்கள் அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய சாம்சன் 51 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவும் 33 ரன்னில் வெளியேற, 44.1 ஓவரில் 256 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
Related Cricket News on Shreyas iyer
-
ஸ்ரேயாஸ் ஐயருக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்த போதிலும் பிசிசிஐ அவருக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஸ்ரேயஸ் ஐயருக்கு கூடுதல் வாய்ப்புகள் தரவேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார். ...
-
ஸ்ரேயஸ் ஐயருக்கு அட்வைஸ் வழங்கிய முன்னா தேர்வுக்குழு அதிகாரி!
ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்பே கவலை தெரிவித்துள்ளார். ...
-
ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய வீரர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சியாட்டத்தில் சொதப்பிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸின் பலவீனம் இதுதான் - மதன் லால்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்தால் அது மிகப்பெரிய ஆபத்து என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கு முன் அக்ஸர் களமிறங்கியது ஏன்? - ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேலுக்கு கீழ் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்தது ஏன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ...
-
IND vs SA, 2nd T20I: இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் போராடி தோற்றநிலையில், அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். ...
-
இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் செயல்படும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரஸ்ஸலுக்கு முடிந்தவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தேர்வு குழு சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக் கொள்வதாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் ஐயர் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார். ...
-
சர்ச்சையை கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு..!
கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை உடனான வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!
நீங்கள் ப்ளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24