Shreyas
ஆஃப்கான் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர்; பிசிசிஐ கடும் அதிருப்தி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன், திடீரென்று நாடு திரும்பினார். அந்த டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷன் கலந்துகொண்ட நிலையில் அவர் நாடு திரும்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷனுக்கு மாற்றாக கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், இவருக்கும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இந்நிலையில், நாடு திரும்பிய இஷான் கிஷன், எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல், குறிப்பாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லாமல் ஊர் சுற்ற ஆரம்பித்தார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சியின் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, கிஷன் உற்சாகமாக காணப்பட்டார். இதன்மூலம், இஷான் கிஷன் நல்ல நிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவானது. மேலும் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியுடன் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சிலும் இஷான் கிஷன் பங்கேற்றது சர்ச்சையானது.
Related Cricket News on Shreyas
-
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலியா டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், நட்சத்திர வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
டி20 கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் உங்கள் அணியில் இல்லை என்றால் எப்படி? என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs AUS, 5th T20I: ஸ்ரேயாஸ் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 161 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவது இந்தியாவை பலப்படுத்தும் என்று இளம் வீரர் ரவி பிஷ்னோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
2024 ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாதி வீரர்களை அணியை விட்டு நீக்கி அதிர வைத்துள்ளது. ...
-
ரோஹித், கோலியை விட அவர் தான் வெற்றியைத் தேடித்தருவார் - கௌதம் கம்பீர்!
இறுதிப்போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நான் அடுத்தடுத்த போட்டிகளில் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் சதம் வீண்; முகமது ஷமி அபாரம் - இறுதிப்போட்டிகுள் நுழைந்தது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அபார சதம்; நியூசிலாந்துக்கு 398 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 398 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
நாங்கள் எதிர்பார்த்தது போலவே பிட்ச் இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47