Smriti mandhana
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்!
இலங்கையில் நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து மூன்று இடங்கள் முன்னேறி 06ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்திய வீராங்களை ஷஃபாலி வர்மா 11ஆம் இடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் 5 இடங்கள் பின் தங்கி 16ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Related Cricket News on Smriti mandhana
-
இந்த ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறி விட்டோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
நாங்கள் இத்தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம் என நினைக்கிறேன் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; இலங்கை அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ரேனுகா அபாரம்; வங்கதேசத்தை பந்தாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று இலங்கை சென்றடைந்துள்ளது. ...
-
INDW vs SAW 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான விருதை வென்றனர் பும்ரா & மந்தனா!
ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த பும்ரா, ரோஹித், மந்தனா!
ஐசிசியின் ஜூன் மாத்ததிற்கான சிறந்த வீரர், வீரங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்ம, ஸ்மிருதி மந்தனா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
INDW vs SAW, Test: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
INDW vs SAW, Test: ஷஃபாலி இரட்டை சதம்; ஸ்மிருதி சதம் - வரலாறு படைத்த இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா! பார்ட்னர்ஷிப்பிலும் தொடக்க ஜோடி சாதனை!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இரு வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட் & ஒருநாள்)சதமடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24