Sourav ganguly
ஐபிஎல் தொடரில் மீண்டும் வருகிறது ஹோம் & அவே ஃபார்மட்!
கரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிற்கு வெளியேயும், இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கடந்த 2 சீசனில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனிலிருந்து மீண்டும் பழைய முறை திரும்புகிறது.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். அதில் ஒருமுறை தங்களது ஹோம் கிரவுண்டிலும், மற்றொரு முறை எதிரணியின் மைதானத்திலும் விளையாடும். எடுத்துக்காட்டாக சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸுடன் மோதும் 2 போட்டிகளில், ஒரு போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திலும், மற்றொரு போட்டி மும்பை வான்கடேவிலும் நடக்கும்.
2021 ஐபிஎல் சீசன் முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்திலும், 2022 ஐபிஎல்லின் முதல் பாதி மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னையிலும், 2ஆம் பாதி அமீரகத்திலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த சீசனை பழைய மாதிரி ஹோம் & அவே ஃபார்மட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. அடுத்த ஐபிஎல் சீசன் சற்று முன்னதாகவே தொடங்கப்படும் என தெரிகிறது.
Related Cricket News on Sourav ganguly
-
புதிய விதிமுறைகளை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!
மன்கட் அவுட்டுக்கு புதிய பெயர், பந்தை எச்சில் தொட்டு பாலிஷ் செய்யத் தடை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு புதிய விதிமுறைகளை இன்று அறிவித்துள்ளது. ...
-
பிசிசிஐ தலைவர், செயலாளர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
பிசிசிஐ எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளதால் ஏற்கனவே தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி 2வது முறையாக மீண்டும் அடுத்த 3 வருடங்களுக்கு தலைவராக நீடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியின் ஃபார்ம் அவுட்டிற்கு கங்குலி தான் காரணம் - ரஷித் லதிஃப்!
கங்குலியின் பின்புல செயல்பாடுகள் தான் விராட் கோலியின் ஃபார்ம் பறிபோக முதல் காரணமாக அமைந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...
-
பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் - சௌரவ் கங்குலி!
இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை. பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
சௌரவ் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்தியா மகாராஜாஸ்!
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா - உலக லெவன் மோதும் ஸ்பெஷல் போட்டி நடக்கவுள்ளது. ...
-
மீண்டும் களத்தில் இறங்கும் சௌரவ் கங்குலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி பங்கேற்பார் என செய்தி வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி தலைவராகிறார் சௌரவ் கங்குலி?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கோப்பை; உறுதிசெய்த கங்குலி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். ...
-
தொடரை வென்ற இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு!
இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளதைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மௌனம் கலைத்த சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் அடிக்கும் வழியை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
அடுத்தடுத்து கேப்டன் மாற்றம் குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு தரப்படுவது குறித்து கங்குலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். ...
-
மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் சௌரவ் கக்குலி - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி என சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். ...
-
இப்போது வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது போல் எங்களுக்கு இருக்காது - சௌரவ் கங்குலி!
பிசிசிஐயில் தாம் தலைவராக இருந்த 3 வருடம் பொற்காலமாக இருந்தது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரின் போட்டிகள் அதிகரிப்படுகின்றனவா? - சௌரவ் கங்குலி பதில்!
அடுத்த இரு வருடங்களுக்கு ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24