Sourav ganguly
கோலி குறித்து கங்குலி தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தரும் சல்மான் பட்!
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்துவந்தார் விராட் கோலி. 2017ஆம் ஆண்டு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து அதிலிருந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார் கோலி. டெஸ்ட் அணியின் கேப்டன்சியை 2014ஆம் ஆண்டே ஏற்றார்.
4 ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்தி வந்தார் விராட் கோலி. ஆனால் அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக் கூட ஜெயிக்கவில்லை என்பதுதான் பெரும் விமர்சனமாக இருந்து வந்தது. ஆனாலும் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது.