T20 world cup
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.
Related Cricket News on T20 world cup
-
ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு சிலரில் பும்ராவும் ஒருவர்- ரவி சாஸ்திரி புகழாரம்!
நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராக இருந்தார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
-
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லமை நியமிக்கலாம் என்று ஈயன் மோர்கன் ஆலோசனை கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான சரியான தேர்வாக ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவர் இருப்பார் என்று நம்புகிறேன் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தோல்வியின் காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார். ...
-
இந்திய அணி மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுப்பிடிப்பது அவசியம் - மிதாலி ராஜ்!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
பந்தை சேதப்படுத்தியதில் தங்கள் வீரர்கள் சிக்கிய முந்தைய சம்பவங்களை அவர்கள் நினைவில் வைத்து பேச வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக்கிற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
2023 உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய போது எடுத்த புகைப்படத்தையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் இணைந்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறிய கருத்துக்கு ரசிகர்கள் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
ஐபிஎல் தொடரின் போட்டி சூழல் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அது இன்று சர்வதேச அரங்கில் நாம் காணும் வெற்றிக்கு பங்களிக்கிறது என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊரானா வதேதராவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். ...
-
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
-
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47