Advertisement
Advertisement

Tamil cricket news

India vs England, T20 World Cup, Semi-final 2 - IND vs ENG Cricket Match Prediction, Where To Watch,
Image Source: Google

இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

By Bharathi Kannan November 09, 2022 • 20:09 PM View: 406

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும். 

இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மிடில் வரிசை உலகத்தரத்தில் இருப்பதுதான் அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில்  இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லருக்கு எதிராக 30 பந்துகளை வீசி 5 விக்கெட்களை எடுத்திருக்கிறார். இதனால், பவர் பிளேவில் இங்கிலாந்து நெருக்கடியுடன்தான் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Cricket News on Tamil cricket news