Tamil cricket
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
Related Cricket News on Tamil cricket
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப்- வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
புஜ்ஜி பாபு கோப்பை 2024: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய இஷான் கிஷன்!
புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியை வழிநடத்திவரும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேமி ஸ்மித்; வைரல் காணொளி!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி வீரர் ஜேமி ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 13ஆவது வீரர் எனும் பெருமையை ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2024: ஒரிஜினல்ஸை வீழ்த்திய எலிமினேட்டர் சுற்றில் நுழைந்தது ஃபீனிக்ஸ்!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WI vs SA, 2nd Test: 160 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; தடுமாறும் விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
சொந்த மண்ணில் முதல் விக்கெட்; ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷமார் ஜோசப் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் முதல் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் நிச்சயம் முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், மாற்று வீரருக்கான தேர்வில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரிடையே போட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அயர்லாந்து மகளிர் அணியின் கேப்டன் லாரா டெலானி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்கு; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47