Tamil cricket
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய டோனவன் ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் டிரெண்ட் ராக்கெட்ஸ் - ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓவல் இன்விசிபில் அணிக்கு வில் ஜேக்ஸ் - டேவிட் மாலன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் வில் ஜேக்ஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜோர்டன் காக்ஸும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக டோனவன் ஃபெரீரா 27 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் ஓவல் இன்விசிபில் அணியானது 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Tamil cricket
-
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடரில் இருந்து ஸ்பென்சர் ஜான்சன் விலகல்!
ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக இத்தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப் அசத்தல்; காலிறுதிக்கு முன்னேறியது லீசெஸ்டர்ஷைர்!
குளௌசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லீசெஸ்டர்ஷைர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி வெறுநாட்டில் நடத்த திட்டமிட்டால், அது நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார் ...
-
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டெவான் கான்வே, ஃபின் ஆலன்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். ...
-
எஸ்ஏ20 2025: முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்களுக்கு ஏலத்திற்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ் அணி. ...
-
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான அணிகளின் கேப்டன்களாக ஷுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பென் ஸ்டோக்ஸ், டிரெண்ட் போல்ட்டை ஒப்பந்தம் செய்தது எம்ஐ கேப்டவுன்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது பென் ஸ்டோக்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கயானாவில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்ட் மூலம் விக்கெட்டை வீழ்த்திய ஆதில் ரஷிதின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
இம்முறையும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை ஹாட்ரிக் முறையாக கைப்பற்றும் என்று நினைக்கிறேன் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47