Tamil cricket
ஆஷஸ் 2023: கடைசி வரை போராடிய இங்கிலாந்து; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது ஆஸ்திரேலியா!
பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார்.
கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Tamil cricket
-
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டின் புலியைப் போன்றவர், அவரைக்கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் லீ கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2023: நெல்லையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர்!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: நெல்லையை 124 ரன்களில் சுருட்டியது திருப்பூர்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: சிக்கந்தர் ரஸா அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
என்னைவிட எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் - அஸ்வின்!
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் ஜோ ரூட்டிடன் மாற்றங்களை உருவாக்கியுள்ளது - கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு மாதங்கள் அவர் பணியாற்றியது அவர் இந்த மாதிரி விளையாடுவதில் நிறைய அழுத்தமான மாற்றங்களை உருவாக்கி இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஜஹாங்கீர் சதம்; நேபாளுக்கு 210 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: விக்ரம்ஜித், எட்வர்ட்ஸ் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 316 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வாய்ப்பை உதறிய கேரி கிரிஸ்டன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை என தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
கோலி, ஸ்மித்தின் அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் - அலெக்ஸ் கேரி!
அலெக்ஸ் கேரி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஸ்டீவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அளித்துள்ளார். ...
-
பிசிபி தேர்தலிலிருந்து விலகிய நஜாம் சேதி; பாகிஸ்தான் கிரிக்க்கெட்டில் புதிய குழப்பம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு அஷிப் சதாரி, செபாஸ் ஷெரிப் ஆகியோர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிலிருந்து விலகுவதாக பிசிபி தலைவர் நஜாம் சேதி அறிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: மிரட்டும் இங்கிலாந்து, திணறும் ஆஸ்திரேலியா; வெற்றி யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது கோவை கிங்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47