The indian
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோஸ் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும், பென் டக்கெட் 35 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on The indian
-
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஸ்லீப்பில் நின்று கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG: இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோடி என்ற புதிய சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை படைத்துள்ளனர். ...
-
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
ராஜத் பட்டிதார் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஃபார்மில் இருப்பதாகவும், ஆனாலும் நாளைய போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் விராட் கோலிக்கு பதிலாக புஜாரா மற்றும் ரஹானேவை மீண்டும் அணியில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக்கை!
இந்தியாவில் இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் டெஸ்ட் போட்டி ஒன்றரை அல்லது இரண்டு நாள்களுக்குள் முடிவடைந்துவிடும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தீப்தி சர்மாவுக்கு பிசிசிஐ விருது; விருது பெற்றவர்கள் முழு பட்டியல்!
பிசிசிஐ 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது ஷுப்மன் கில்லிற்கும், சிறந்த வீராங்கனை விருதை தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர் சட்டேஷ்வர் புஜாரா தான் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலிக்கு மாற்று வீரராக சட்டேஷ்வர் புஜாரா சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் அப்படி சிந்திக்கிறார்களா? என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார். ...
-
இத்தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் எனவும், அதற்காகதான் கூடுதலாக இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பந்துவீச்சாளராக அது என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - இங்கிலாந்தை எச்சரிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா!
வேகமாக ரன்கள் எடுக்க முயற்சிக்கும் போது தான் தம்மை போன்ற பந்துவீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
அயோத்தியில் தென்பட்ட விராட் கோலி; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் - வைரலாகும் காணொளி!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது விராட் கோலியைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரிஷப் பந்த் , இஷான் கிஷானும் போட்டியில் உள்ளனர் - ராகுல் டிராவிட்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் போட்டியில் உள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரி, ஷுப்மன் கில் ஆகியோருக்கு பிசிசிஐ விருது!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், இளம் வீரர் ஷுப்மன் கில்லிற்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24